search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண்ணீர் அஞ்சலி"

    • பவானி முதல் சின்ன பள்ளம் வரை ரோட்டின் இரு பகுதிகளிலும் சுமார் 950 மரங்கள் வெட்டப்பட்டு வருகிறது.
    • ஒப்பாரி பாடல்கள் பாடி கண்ணீர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பவானி:

    பவானி மேட்டூர் மெயின் ரோட்டில் சாலை விரிவாக்க பணிகளுக்காக பவானி முதல் சின்ன பள்ளம் வரை ரோட்டின் இரு பகுதிகளிலும் சுமார் 950 மரங்கள் வெட்டப்பட்டு வருகிறது.

    பசுமை தீர்ப்பாயம் உத்தரவுப்படி ஒரு மரத்திற்கு 10 மரங்கள் நடப்பட்டு வளர்க்கப்பட வேண்டும் என்ற உத்திரவு படி பவானி முதல் சின்ன பள்ளம் வரை 9,500 மரங்கள் நடப்பட்டு அதை நல்ல முறையில் வளர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியு றுத்தி ஈரோடு மாவட்ட பசு மை தாயகம் சார்பில் நூதன போராட்டம் நடத்தி னர்.

    பசுமை தாயகத்தினர் பவானி, சித்தார் மேட்டூர் மெயின் ரோட்டில் சுமார் 100 ஆண்டு வளர்ந்து இருந்த மரம் வெட்டப்பட்ட நிலையில் அந்த மரத்தின் வேர் பகுதிக்கு மாலை அணிவித்து மலர் தூவி ஒப்பாரி பாடல்கள் பாடி கண்ணீர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பசுமை த்தாயக மாநில துணைச் செயலாளர் ராஜே ந்திரன் தலைமையில் நடை பெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் மாநில துணைத்தலைவர்கள் பரமசிவம், வெங்கடாசலம், மாநில செயற்குழு உறுப்பி னர் கோபால், ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் வக்கீல் கிருஷ்ணமூர்த்தி,

    தலைவர் வக்கீல் செங்கோ ட்டையன், பொருளாளர் திலகம், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் மனோ கரன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ரவி, தொழி ற்சங்க பொறுப்பாளர்கள் சுதாகர், திருமுருகன், சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×